அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'தெறி' படத்தின் டீஸரை பிப்ரவரி 5ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

 

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார்.

 

விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார்கள். விஜய் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். வில்லனாக மகேந்திரன் நடித்து வருகிறார். முதன் முறையாக விஜய்யின் மகள் திவ்யாவும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

இப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்து கொடுத்துவிட்டார் விஜய். படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. மேலும், இப்படத்தின் டீஸரை பிப்ரவரி 5ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

 

'தெறி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பரதன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார் விஜய்.
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி