மாதவன் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'இறுதிச்சுற்று' படத்தை பார்க்க விரும்புவதாக பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

மாதவன், ரித்திகா, நாசர், ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுதா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'இறுதிச்சுற்று'. சசிகாந்த் மற்றும் சி.வி.குமார் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை யு.டிவி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

 

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், பல்வேறு திரையரங்குகளில் 'இறுதிச்சுற்று' படத்துக்கு காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

 

இப்படத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் 'தி இந்து' ஆங்கில விமர்சனத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். "இந்த குத்துச்சண்டை படத்தைக் காண விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார் மைக் டைசன்.

 

மைக் டைசனின் இந்த பகிர்வால், 'இறுதிச்சுற்று' படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மைக் டைசனின் ஃபேஸ்புக் பக்கத்தை சுமார் 51 லட்சம் பேர் விரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி