குத்து சண்டை வீரர் முகமது அலி வாழ்க்கை கதையில் நடிக்கும் மாதவன் 15 கிலோ எடை குறைத்தார். பிரபல குத்து சண்டை வீரர் முகமது அலி. இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து லால் என்ற இந்தி படம் உருவாகிறது. இப்படத்தை மணிரத்னம் உதவி இயக்குனர் சுதா கொங்கரா டைரக்ட் செய்கிறார். இதுபற்றி மாதவன் கூறும்போது,‘குத்து சண்டை வீரராக நடிப்பதற்காக தினமும் பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று சிறப்பு பயிற்சி பெற்றேன். உடல் எடையை 15 கிலோ குறைத்திருக்கிறேன். இப்போது உடல் அமைப்பும், பாடி லேங்குவேஜும் முற்றிலும் மாறிவிட்டது. நடப்பது, யோசிப்பது எல்லாமே பாக்சிங் பற்றித்தான்.

 

கடந்த சில மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த எனக்கு நிச்சயம் பிரேக் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நடிகருக்கும் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்ளும் நிலைதான் ஏற்படும். வேட்டை மற்றும் ஜோடி பிரேக்கர்ஸ் ஆகிய படங்களுக்கு பிறகு எனக்கு நிச்சயம் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. இப்போது புதிய பரிமாணத்துக்கு மாறி அதில் பயணம் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி