ஹேப்பி நியூ இயர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் அடுத்து நடிக்க இருக்கும் படம் ரயீஸ். 2015ம் ஆண்டு துவங்க உள்ள இந்த படத்தில் ஷாருக்கானின் புதிய ஜோடியை பாலிவுட் ரசிகர்கள் பார்க்க உள்ளனராம். இந்த படத்தை தயாரிக்கும் எக்செல் என்டர்டைன்மென்ட், இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக சோனம் நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளது.ஷாருக்கான்-சோனம் நடிக்கும் ரயீஸ், ஒரு த்ரில்லர் படமாம். இந்த படத்தில் பரன் அக்தர் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். சோனமுடன் இணைந்து ஷாருக்கான் இணைந்து நடிக்கும் முதல் படம் இது தான். பரன் அக்தர் இயக்கத்தில் டான், டான் 2 ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அவருடன் ஷாருக்கான் இணைந்து நடிப்பது இது தான் முதல் முறையாம். இந்த புதிய கூட்டணியில் உரவாக இருக்கும் இந்த படத்திலும் ஷாருக்கான் ஒரு புதிய அவதாரம் எடுக்க உள்ளாராம்.

ஷாருக்கானின் இந்த முற்றிலும் வித்தியாசமான தோற்றத்திற்காக ஹாலிவுட்டில் இருந்து மேக் அப் டீம் ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளதாம். ரயீஸ் படத்தில் குஜராத்தி தாதா கேரக்டரில் ஷாருக்கான் நடிக்கிறாராம். இது வரை பார்த்திராத புதிய தோற்றத்தில் ஷாருக்கானை கொண்டு வருவதற்காக டைரக்டரும், மேக் அப் மேன்களும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்களாம்.
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி