அலியா பட் உங்களை மாதிரியே நடிக்கிறார்; உங்களை மாதிரியே சிரிக்கிறார்’’ என யாராவது ஒப்பிட்டுப் பேசினால் செம கடுப்பாகிறார் கரீனா கபூர். தினம் தினம் இப்படிக் கேட்டு காது புளிக்கிறதாம். ‘‘என்னை மாதிரி நடிக்கத்தான் நான் இருக்கிறேனே... எதற்கு அலியா?’’ எனக் கோபமாகக் கேட்கிறார் கரீனா. ஆனால் அலியா, ‘‘நான் கரீனாவின் தீவிர ரசிகை’’ என பயபக்தியோடு சொல்கிறார்.

 

 

 

கிறிஸ்டன் ஸ்டூவர்ட் நடிப்பிலிருந்து ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். ‘‘சின்ன வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். இப்போது தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் நடித்துக் களைத்துப் போயிருக்கிறேன்.

 

 

 

கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும்’’ என்கிறார் அவர். ‘‘நடிப்பைத் தவிரவும் பல கலைகள் எனக்குத் தெரியும். இந்த ஓய்வில் அப்படி முயற்சி செய்யப் போகிறேன்’’ என்கிறவர், உடனடியாக ஒரு குறும்படம் எடுக்கும் ஐடியாவில் இருக்கிறார்.

 

 

 

புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி, அதிலிருந்து பிழைத்து மீண்டவர் நடிகை லிஸா ரே. புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் போய்க் கலந்துகொள்ளும் அக்கறையுள்ள லிஸா, இப்போது புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஒன்றை தொடங்கப் போகிறார்.

 

 

 

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கட்சிக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை தன் வீட்டில் நடத்தினார், நடிகை வெய்ன் பால்ட்ரோ. வந்திருந்த விருந்தினர்கள் கூட்டத்தில் ஒபாமாவைப் பற்றி பேசுவதற்குள் திக்கித் திணறி விட்டார் வெய்ன். ‘‘நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள். அதனால் நான் பேச முடியாமல் தவிக்கிறேன்’’ என்று ஒபாமாவிடம் சொல்லி சமாளித்தார் அவர்.

 

 

 

நடிகர் ரண்வீர் சிங், தனக்கு ஜோடியாக நடிக்கும் பரிணீதி சோப்ராவை ‘‘குருஜி’’ என்று மரியாதையாக அழைக்கிறார். பரிணீதி பாரம்பரிய இசையை முறையாகக் கற்றவர்; நன்கு பாடவும் செய்வார். ஷூட்டிங் பிரேக்கில் ரண்வீர் சிங்குக்கு பாடக் கற்றுத் தருகிறார். இதனால்தான் இந்த ‘குரு’ மரியாதை.
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி