மும்பை: அமிதாப்பச்சன் எழுதிய கவிதைக்கு நடனம் ஆடுகிறார் மஞ்சு வாரியர். அமிதாப்பச்சனுடன் விளம்பர படமொன்றில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்தார். அப்போது அவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பை இருவரும் தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் அமிதாப்பச்சன், மறைந்த தனது தந்தை ஹரிவம்ஷாராய் பச்சன் பற்றி கவிதை எழுதினார். அந்த கவிதைக்கு நடனம் ஆட முடிவு செய்திருக்கிறார் மஞ்சு வாரியர்.

 

இது பற்றி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதற்கான நடனத்தை மஞ்சுவே அமைக்க உள்ளார். மும்பையில் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. நடிப்பு தவிர மேடை நாட்டிய நிகழ்ச்சிகளிலும் மஞ்சு வாரியர் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி