உலகின் பல நாடுகளில் வெளியான 'ஸ்டார் வார்ஸ்-7' திரைப்படம் மிகப் பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.

 

80-களில் ஹாலிவுட்டையே புரட்டிப் போட்ட திரைப்படம் 'ஸ்டார் வார்ஸ்'. தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களைப் பெற்றுள்ள 'ஸ்டார் வார்ஸ்' படங்கள் இது வரை மொத்தம் 6 பாகங்கள் வெளியாகியுள்ளன. இதோடு ஒரு அனிமேஷன் திரைப்படமும் வெளியாகியுள்ளது.

 

உலக அளவில் ஸ்டார் வார்ஸ் பட ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் 7-வது பாகம் 'ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்' என்ற பெயரில் ஜே.ஜே. ஆப்ராம்ஸ் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

 

வெளியான முதல் வாரத்தில் இந்தப் படம் உலக அளவில் 3,30 கோடியே 88 லட்சம் ($517) டாலர்கள் வசூலை வாரிக் குவித்துள்ளது. இது இதற்கு முன்னர் வெளியாகி வசூல் சாதனைப் படைத்த 'தி ஜுராஸிக் வேர்ல்ட்' படத்தை விட சற்று குறைவாகும்.

 

உலக அளவில் 30,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஸ்டார் வார்ஸ் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் ஸ்டார் வார்ஸுக்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது.

 

இதற்கு முன் இத்தகைய வசூல் சாதனையை 'ஜுராஸிக் வேர்ல்ட்', ஹாரி பாட்டர் போன்ற படங்கள் பெற்றிருந்தன. அவை அனைத்தையும் ஸ்டார் வார்ஸ் 7 முறியடித்துள்ளது.

 

இன்னும் ஸ்டார் வார்ஸ் திரைப்படம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெளியாகவில்லை. கிறுஸ்துமஸ் தினத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் மேலும் படத்தின் வசூல் குவிய வாய்ப்புள்ளது.
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி