பென் ஸ்டில்லர் இயக்கி நடித்திருக்கும் தி சீக்ரெட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி டிசம்பர் 25 கிறிஸ்மஸ் தினத்தன்று அமெ‌ரிக்காவில் வெளியாகிறது. அதற்கு முன்பே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு படத்தைக் குறித்த நல்ல விமர்சனங்கள் தீயாக பரவியது.

ஹாலிவுட் தயா‌ரிப்பான இது யுஎஸ்-ஸில் வெளியாகும் முன் கடந்த 19ஆம் தேதி இத்தாலி மற்றும் குவைத்திலும், 20ஆம் தேதி பிரெசிலிலும், 21ஆம் தேதி ஹாங்காங்கிலும் வெளியானது. 24ஆம் தேதி தைவான். இத்தனை நாடுகளுக்குப் பிறகுதான் யுஎஸ்ஏ.

இந்தியாவில் இப்படம் ஜனவ‌ரி 3ஆம் தேதி வெளியாகிறது. தி சீக்ரெட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி 1939ல் ஜேம்ஸ் தர்பர் எழுதிய சிறுகதை. இதனை அடிப்படையாக வைத்து இதே பெய‌ரில் 1947ல் ஒரு படம் வெளிவந்தது. 2013ல் மீண்டும் பென் ஸ்டில்ல‌ரின் நடிப்பு மற்றும் இயக்கத்தில்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் Kristen Wiig. மற்ற ஹாலிவுட் நடத்திரங்களைப் போல் இந்தியாவுக்கு ஆன்மீகத் தேடலுக்காக வந்திருக்கிறார். வேலைப்பளு காரணமாக மீண்டும் இந்தியாவுக்கு வரவிருக்கிறாராம் இவர். இந்தப் படத்தில் உள்ளது போன்றே பல அற்புதமான விஷயங்கள் இவ‌ரின் இந்தியப் பயணத்தின் போது நடந்ததாம்.

ர‌ஜினி இவருக்கும் ஹிமாலய மாஸ்டர்ஸ் பற்றிய புத்தகத்தை தந்திருப்பாரோ?
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி