திடீர்னு இப்படி ரெண்டு மூணு ஸ்டேடஸ் கண்ணில் பட்டதும் , கொஞ்சம் கவனித்துப் படித்தேன்...

 

இன்று உலகையே அச்சுறுத்தும் எபோலா வைரஸ் பற்றி 2008 ல் வெளியான “தசாவதாரம்” படத்திலேயே எச்சரித்து விட்டாராம் கமல்...

“அப்படியா ?” என்ற ஆச்சரியத்தோடு அடுத்துப் படித்தேன்...

 

பாட்டியாக வரும் கமல் கையில் அமெரிக்காவில் இருந்து வந்த பார்சல் இருக்கும் ...அதைக் கொடுக்க மறுக்கும் பாட்டியிடம் , கமல் “இந்த பார்சலில் இருப்பது பயங்கரமான பயோ ஆயுதம்... இது எபோலா-மார்பர்க் ..” என்று சொல்வாராம்...

 

நண்பர் எழுதியதை நம்ப முடியாமல்

யூ டியூப் போய்ப் பார்த்தேன்...

 

https://www.youtube.com/watch?v=gGxS78AACU4

 

( வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வீடியோ )

 

அட தேவுடா...!

 

கரெக்டாக சொல்கிறார் கமல் “எபோலா” என்று.....!!!

அதுவும் "எபோலா" வருவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே ...!

 

ஏற்கனவே 2003 ல் வந்த “அன்பே சிவம்” படத்தில் கமல் சுனாமி பற்றி சொல்ல .. 2004 டிசம்பர் 26 ல் உலகமே உறைந்து போன அந்த சுனாமி வந்தது...

 

அது சரி....கமலுக்கு மட்டும் எப்படி இப்படி...?

ஒருவேளை நண்பர் எழுதி இருந்தது போல கமலுக்கு கரு நாக்குதானோ..?

அதனால்தான் சொன்னதெல்லாம் பலிக்கிறதோ..?

 

விஷயம் இப்படி சீரியஸ் ஆகப் போய்க் கொண்டிருக்க ....இடையில் ஒரு இடக்கு மடக்கு நண்பரின் பதில் ...

 

# “கரு நாக்கா நம்ம கமலுக்கு..?”

 

# “கவுதமி கிட்ட கேட்டா தெரியும்..”
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி